மதுரை, ஆகஸ்ட் 15 –
மதுரை, அரசு இராஜாஜி மருத்துவமனை மற்றும் மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இந்திய திருநாட்டின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செவிலியர் பள்ளி, செவிலியர் மற்றும் கல்லூரியின் முதல்வர்கள், மதுரை மருத்துவக் கல்லூரி துணை முதல்வர், அரசு இராஜாஜி மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர், நிலைய மருத்துவ அலுவலர்கள், உதவி நிலைய மருத்துவ அலுவலர்கள் மற்றும் செவிலிய கண்காணிப்பாளர்கள் ஆகியோர் முன்னிலையில் இராசாசி மருத்துவமனை முதல்வர்
டாக்டர் அருள் சுந்தரேஷ் குமார் நாட்டின் 79 வது தேசிய கொடியினை ஏற்றினார். அதன் பின்னர் என்சிசி மாணவ மாணவியர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
மேலும் அரசு இராஜாஜி மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு 25 ஆண்டுகள் அப்பழுக்கற்ற முறையில் பணியாற்றியமைக்காகவும் மற்றும் மருத்துவமனையில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காகவும் மொத்தம் 87 நபர்களுக்கு மருத்துவமனையின் முதல்வர் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.



