மதுரை, ஜூலை 16 –
மதுரை விளக்குத்தூண் அருகில் உள்ள தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கல்வி கண் திறந்த கர்ம வீரர் காமராஜரின் 123-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் மதுரை நகர் மாவட்டத் தலைவர் ராஜாங்கம் தலைமையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.கே. ராஜேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட தலைவர்கள் ராஜாங்கம் மற்றும் நடராஜன், மாநில நிர்வாகிகள் தல்லாகுளம் மலைச்சாமி, பைரவமூர்த்தி, சீனிவாசன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் காந்தி, சிவசுந்தரம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்வின் போது மாநில, மாவட்ட மற்றும் சர்க்கிள் கமிட்டி தலைவர் சக்திமுருகன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.