மதுரை, ஜூன் 28 –
மதுரை மாநகரப் போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் வட்டார போக்குவரத்து துறையினரும் இணைந்து காளவாசல் பைபாஸ் பகுதியில் வாகன தனிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த வாகனங்கள் மற்றும் அபாயகரமாக ஓசை எழுப்புதல் அதிக பயணிகளை ஏற்றி சென்ற வாகனங்கள் மற்றும் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்தல் போன்ற போக்குவரத்து விதிமுறை மீறல் செய்த தனியார் பேருந்துகள் மீது வழக்குப் பதிவு செய்து சட்டப் பூர்வ நடவடிக்கைகள் மேற்கொண்டு வாகன ஓட்டுநர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.
அந்த வகையில் இந்த வாகன தனிக்கையானது மதுரை மாநகர போக்குவரத்து காவல் உதவி ஆணையர் இளமாறன் முன்னிலையில் திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அ. தங்கமணி, மதுரை தெற்கு மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வம் ஆகியோர்கள் மேற்கண்ட நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.