ஆலந்தூர், செப். 08 –
ஆலந்தூர் மௌலிவாக்கம் பாய் கடை அருகில் சைதை ஆபிரகாம் தமிழ்நாடு நுகர்வோர் உற்பத்தி கழகத் தலைவர் மற்றும் ஆ. காயத்ரி அறக்கட்டளை நிறுவனர்கள் ஏற்பாட்டில் அன்னை தரசா முதியோர் இல்லம் சாரிட்டபிள் டிரஸ்ட் நிறுவனர் ஆகியோர் இணைந்து துவங்கும் மதர் தெரசா டிரஸ்ட் துவக்க விழா மிக சிறப்பாக நடைபெற்றது.
விழாவின் சிறப்பு விருந்தினர் மு. பாண்டிச்சேரி மற்றும் தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கத் தலைவர், பிஜேபி மாநிலத் துணைத் தலைவர் சட்டநாயகன் ஆர்.சி. பால்கனகராஜ் தலைமையில் அன்னை லீமா ரோஸ் கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் டேவிட் பிரவீன் குமார் வரவேற்புரை வழங்க வழக்கறிஞர் மனிதநேயர் ரகுராமன் முன்னிலையில் விழுப்புரம் பிரேமா அம்மாள் அறக்கட்டளை நிறுவனர் முகுந்தன் பிரேமா, ஊராட்சி மன்ற தலைவர் மகிமை தாஸ், சமூக ஆர்வலர்கள் சேட்டு, தாமஸ், அந்தோனி, ஜெயின், ஜெரால்டு, அந்தோனி சகாயராஜ் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பு செய்தனர்.
நிகழ்ச்சியின் போது வயதானவர்கள், முதியோர்கள் பிள்ளைகள் மற்றும் உறவினர்களால் படும் துன்பங்களை பற்றியும் அவர்களை எவ்வாறு பாதுகாத்து மேம்படுத்துவது என்பது பற்றியும் கருத்துக்கள் பகிரப்பட்டது. நிர்வாகிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.



