மண்ணிவாக்கம், ஆக 8 –
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மண்ணிவாக்கம் ஊராட்சியில் பெரியபாளையத்தம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள
அருள்மிகு பெரியபாளையத்தம்மன் மற்றும் அருள்மிகு தெரு வீதி அம்மன் ஆலயத்தில் ஆடித்திருவிழாவை ஒவ்வொரு வருடமும் வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஆடி திருவிழா நான்காம் வாரம் இன்று காலை அம்மனுக்கு பதிப்போடுதலுடன் துவங்கப்பட்டு அதனைத் தொடர்ந்து காலை 8 மணி அளவில் பால் குடம் எடுத்தல் ஊர்வலம் நடைபெற்றது.
இதனை ஒட்டி அம்மனை வேண்டி விரதம் இருந்த பக்தர்கள் இரத்தினாட்சி அம்மன் கோவிலில் இருந்து 101 பால்குடம் எடுத்து பம்பை உடுக்கையுடன் ஊர்வலமாக பெரியபாளையத்தம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பொதுமக்களுக்கும் அன்னதான வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் கௌரவ தலைவர் பொன்னுசாமி, தலைவர் இரா. ஆனந்தராஜ், செயலாளர் பொன் தர்மராஜ், பொருளாளர் வேலு, துணைத் தலைவர் வி. குமார், ஏ. ஜெயராமன், ஜான் என்கின்ற பன்னீர்செல்வம், இணைச்செயலாளர் அண்ணாதுரை, துணைச் செயலாளர்கள் ஆர். பிரபு, எம்.எம். சேகர், குட்டி என்கின்ற ராஜேந்திரன், எம். சேசன், எ. சுந்தர், கோவில் நிர்வாகிகள் வீரப்பன், எம். சண்முகம், சோமசுந்தரம், தங்கவேல், எம்.ஆர். முனுசாமி, ராஜி என்கின்ற லோகேஸ்வரன், சீனிவாசன், செல்வராஜ், கோபி, எஸ். ராஜா, பி. சண்முகம், என். பாலா, ஆறுமுகம், நட்ராஜ் மற்றும் கோயில் நிர்வாகிகள், பொதுமக்கள், விழா குழுவினர் செய்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து 08.08.2025 காலை 11 மணி அளவில் திருகாப்பு கட்டுதல், 9.8.2025 சனிக்கிழமை மாலை மூன்று மணிக்கு மேல் கரகம் விதி உலா, 10.8.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி அளவில் சந்தன காப்பு, காலை 11 மணி அளவில் அம்மனுக்கு குல்வார்த்தல், மாலை ஆறு மணி அளவில் கும்பம் படைத்தல் மற்றும் வான வேடிக்கையுடன் மாபெரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.