மணவாளக்குறிச்சி, ஜூலை 8 –
மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சுவாமி பெருமாள் (74). ஓய்வு பெற்ற ஐ ஆர் இ எல் தொழிலாளி. கடந்த 4-ம் தேதி வங்கிக்கு சென்று பணம் எடுத்து விட்டு வருவதாக வீட்டில் இருந்து வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடியும் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று சேரமங்கலத்தில் ஒரு தென்னந்தோப்பில் சுவாமி பெருமாள் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. சம்பவ இடம் சென்று பார்த்தபோது அருகில் விஷ பாட்டில் கிடந்தது. அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வருகிறது. இது குறித்து அவரது மகன் சுயம்பு ராஜன் (36) மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.