விழுப்புரம், செப்டம்பர் 17 –
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க கோரி உயிர் தியாகம் செய்தவர்களுக்கு விழுப்புரம் வழுதரெட்டி பகுதியில் அமைந்துள்ள 21 சமூக நீதி போராளிகள் மணிமண்டபத்தில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், முன்னாள் அமைச்சர் பொன்முடி, மஸ்தான் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் லட்சுமணன், அன்னியூர் சிவா 21 தியாகிகளின் திருவுருவ சிலைக்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எம்ஆர்கே பன்னீர்செல்வம்: எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் உயிர்த்தியாகம் செய்த 21 பேரை தியாகிகளாக அறிவித்து அவர்களின் குடும்பங்களுக்கு மாதம் 3000 வழங்கியவர் கருணாநிதி. அதன்படி இன்று அவர்களின் குடும்பங்களுக்கு மாத மாதம் பணம் செல்கிறது. மேலும் அவர்களை மரியாதை செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.
10.5 % இட ஒதுக்கீடு கேட்டவர்கள் தற்போது 15 சதவீதமாக கேட்பதற்கு காரணம் என்ன இது குறித்து நீதிமன்றம் ஆராய்ந்து கொண்டு இருக்கிறது. அது முழுமை பெற்ற பிறகு இடஒதுக்கீடு தரமுடியும். சிறை நிரப்பும் போராட்டம் அன்புமணி அறிவித்து இருக்கிறார். போராட்டம் நடத்தினால் சிறைக்குத்தான் செல்வார்கள் என நகைத்தார்.
சமூகநீதி துரோகி யார் என்பது மக்களுக்கு தெரியும். இட ஒதுக்கீடு துரோகி என்று கூறுபவர்கள் அவர்களை காப்பாற்றினார்களா? தன் கட்சியும் கட்சியைச் சார்ந்தவர்களையும் காப்பாற்ற முடியாதவர்கள் தான் என அன்புமணியை விமர்சித்தார்.



