போகலூர், ஜுலை 8 –
ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் மேற்கு ஒன்றியம் கீழாம்பல் ஊராட்சி கீழாம்பல் கிராமம் பூத் எண்: 241-ல் திமுக தலைவர் ஸ்டாலின் ஆணைப்படி கழக இளைஞர் அணி செயலாளர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, மண்டல பொறுப்பாளர் நிதி மற்றும் சுற்றுசூழல் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுரையின்படி, ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் வழிகாட்டுதலின்படி ஓரணியில் தமிழ்நாடு
என்னும் மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. போகலூர் மேற்கு ஒன்றியத்தின் சார்பாக நடைபெற்ற ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை முகாம் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் தலைமையில் ஒன்றிய கழகச் செயலாளர் ரா. குணசேகரன் முன்னிலையில் கீழாம்பல் ஊராட்சி கீழாம்பல் கிராமத்தில் நடைபெற்றது. கிளைக் கழக நிர்வாகிகள் கணேசன், குணசேகரன் மற்றும் அனைத்து அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் BDA, BLA-2, BLC மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.