போகலூர், ஜுலை 17 –
ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஊராட்சி ஒன்றியம் திமுக கிளைக் கழகச் செயலாளர் மாவட்டக் கழக பிரதிநிதி உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் மாவட்டத் துணைச் செயலாளர் கார்த்திக் பாண்டியன் அரியக்குடி புத்தூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு துணைத்தலைவர் மகளிர் மன்றங்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் காயத்ரி கார்த்திக் பாண்டியன் இவர்களது குழந்தைகள் திரிஷ்வாபாண்டியன், தமிழினியா, தமிழ்நிலா காதணி விழா சத்திரக்குடி ஜே.எஸ்.கே. திருமண மஹாலில் கோலாகலமாக நடைபெற்றது.
காதணி விழாவில் திமுக மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமை வகித்து நடத்தி வைத்தார். காதணி விழாவில்
ராமநாதபுரம் சமஸ்தானம் இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், வக்பு வாரியத் தலைவர் ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, ராமநாதபுரம் மாவட்ட திமுக மாநில மாணவர் அணி செயலாளர் ராஜீவ் காந்தி, பரமக்குடி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் கொடி சந்திரசேகர், கே.வி. ருக்மணி நிறுவனம் நிறுவனர் மூவேந்தன், அரியக்குடி புத்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோபால்சாமி ஆகியோர் விழாவில் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக போகலூர் ஊராட்சி ஒன்றியம் முன்னாள் சேர்மன் போகலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன் வரவேற்புரை ஆற்றினார். விழாவில் கட்சியின் முன்னோடிகள், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டு குழந்தை செல்வங்களை வாழ்த்தினர். காதணி விழாவிற்கு வந்த அனைவரையும் திமுக பிரமுகர் கார்த்திக் பாண்டியன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி பாண்டியன் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் வரவேற்று உபசரித்தனர்.