மயிலாடுதுறை, ஆகஸ்ட் 9 –
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுக்கா பெருஞ்சேரி கிராமத்தில் அமைந்துள்ளது வள்ளி, தெய்வானையுடன் உடனாகிய ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம். இங்கு பௌர்ணமி திதியையொட்டி வள்ளுவ குல அந்தனர்கள் குரு வழிகாட்டுதலின் பேரில் தங்கள் பாரம்பரிய முறைப்படி பூணூல் (முப்புரி னூல் ) அணியும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு கணபதி ஹோமம் செய்து முருகனை வழிபட்டு வள்ளுவ குல அந்தனர்கள் பூணூல் அணிந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் 100 க்கு மேற்பட்டவர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டு தங்கள் பாரம்பரிய குல நிகழ்ச்சியான பூணூல் அணியும் நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.