நாகர்கோவில், செப். 17 –
குமரி கிழக்கு மாவட்ட அஇஅதிமுக சார்பில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாள் விழா சிறப்புற கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு நாகர்கோவில், ஒழுகினசேரி சந்திப்பில் உள்ள அவரது திருஉருவச் சிலைக்கு தளவாய்சுந்தரம் எம்எல்ஏ தலைமையில் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில் கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான நாஞ்சில் எம்.வின்சென்ட், கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி. பச்சைமால், குமரி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் ஜெயசுதர்சன், கழக எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் கிருஷ்ணதாஸ், கழக இலக்கிய அணி இணைச் செயலாளர் சந்துரு, கழக வர்த்தக அணி இணைச் செயலாளர் ராஜன், கழக மகளிர் அணி துணைச் செயலாளர் ராணி, மாவட்ட கழக அவைத்தலைவர் எம்.சேவியர் மனோகரன், மாவட்ட கழக துணைச் செயலாளர் சுகுமாரன், 25-வது வார்டு மாமன்ற உறுப்பினரும், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளருமான அக்சயாகண்ணன், நாகர்கோவில் கிழக்கு பகுதி கழகச் செயலாளர் ஜெயகோபால், தெற்கு பகுதி கழகச் செயலாளர் முருகேஷ்வரன், இராஜாக்கமங்கலம் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் வீராசாமி, திருவட்டார் ஒன்றிய கழகச் செயலாளர் ஜெயதாஸ், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ரபீக், மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் ராஜாராம், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சந்திரன், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் ஜெயசீலன், தலைமை கழகப் பேச்சாளர் நீலகண்டன், மாவட்ட அமைப்புசாரா ஒட்டுனரணி தலைவர் மாணிக்கராஜ், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பாலன், சுசீந்திரம் நாகசாயி, வட்ட செயலாளர் இசங்கை மாதவன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



