காவேரிப்பட்டணம், செப். 25 –
கிருஷ்ணகிரி மாவட்டம் பெரியமுத்தூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு திமுக மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்வெங்கடேசன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் திமுக தலைமை செயற்கு உறுப்பினர் செந்தில், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவப்பிரகாசம், உமாசங்கர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜு, சிகாமணி மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி முகாமை துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் குப்புராஜ் கவுரப்பன், ராஜி, மூர்த்தி, வேடியப்பன் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முகாமில் மகளிர் உரிமைத் தொகை, ஆதார் பெயர் நீக்கம், சேர்த்தல், பட்டா மாறுதல் உள்ளிட்ட மனுக்கள் பெறப்பட்டது.



