சங்கரன்கோவில், ஜூலை 9 –
தமிழ்நாடு முதலமைச்சர் திமுக தலைவர் ஓரணியில் தமிழ்நாடு என்று மாபெரும் இயக்கத்தை அறிவித்து அதை மாநிலம் முழுவதும் வெற்றிகரமாக செயல்படுத்தி வருகின்றார். இதன் தொடர்ச்சியாக சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி,
மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் பெரியகோவிலான்குளம் கிராமத்தில் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் பல்வேறு மாற்று கட்சியினர் தங்களை திமுகவில் இணைத்துக் கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை தலைமை வகித்தார்.
இதில் அதிமுக, பாஜக, தவெக, புதிய தமிழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சார்ந்த 150 க்கும் மேற்பட்டோர் தென்காசி வடக்கு மாவட்ட கழக செயலாளர் ராஜா எம்எல்ஏ முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர். திமுகவில் இணைந்தவர்களை வரவேற்று ராஜா எம்எல்ஏ பேசியதாவது: இந்தியாவிலேயே இன்று நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செயல்படுத்தி உள்ள திட்டங்களால் இன்று பல்வேறு தரப்பு மக்களும் பயனடைந்துள்ளனர். முதல்வரின் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இன்று திமுகவில் இணைந்துள்ள அனைவரையும் வரவேற்பதாகவும் கட்சிப் பணிகளை சிறப்பாக செயல்படுத்தி வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற வேண்டும் என பேசினார். நிகழ்ச்சியில் திமுக பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள், பல்வேறு கட்சிகளை சேர்ந்த பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.