கிருஷ்ணகிரி, ஜுலை 14 –
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த புலியூர் கிராமத்தில் அமைந்துள்ள ரங்கா கிளினிக் & மெடிக்கல்ஸ் நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம் டாக்டர். விருத்திக் ரோஷன் தலைமையில் நடைபெற்றது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் காவேரிப்பட்டினம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு. ரவிச்சந்திரன், மத்தூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு. நரேஷ்குமார் அவர்கள் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மு. கூட்டுறவு சங்க தலைவர் பண்ணந்தூர் பழனிசாமி, தொழிலதிபர் பழனி, டாக்டர் நிர்மல் குமார், டாக்டர் மணிரத்தினம், டாக்டர் திவ்யா, ராமன், கோகுல கண்ணன், ராஜப்பன், உதயகுமார், ஜெய்ஹிந்த், சிராஜ், அமுதன், வீரப்பன், மாதேஷ்குமார் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.