புதுக்கடை, நவ. 25 –
புதுக்கடை பேரூராட்சிக்குட்பட்ட, தென்னாட்டுவிளை களப்பாறை சாலை, வாண்ணான்குளம் – காக்குடிவிளை ஆகிய சாலைகள் சீரமைத்து பல வருடங்கள் ஆகியதால் சாலைகளை முன்னுரிமை வழங்கி சீரமைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை அதிகாரிகளிடமும் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் தென்னாட்டுவிளை களப்பாறை சாலை ரூ.40 லட்சமும், வாண்ணான்குளம் – காக்குடிவிளை சாலை ரூ.17 லட்சமும் என இரண்டு சாலைகளை சிரமைக்க ரூ.57 – லட்சம் சிறப்பு திட்டம் மற்றும் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சீரமைப்பு பணிகள் முடிவடைந்தது. இந்த சாலைகளை மக்கள் பயன்பாட்டிற்கு ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் முஞ்சிறை கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரெகுபதி, மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைவர் அஸ்வந்த், புதுக்கடை பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் ராஜம், மரிய புஷ்பம், நிர்வாகிகள் ஜாண்சன், குமார் மற்றும் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



