புதுக்கடை, செப். 17 –
புதுக்கடை அருகே கீழ்குளம் பகுதியை சேர்ந்தவர் அஷ்வந்த் (28). கொத்தனார் வேலை செய்கிறார். இவரது நண்பர் நிக்சன் (28) கடல் தொழில் செய்கிறார். இருவரும் சம்பவ தினம் பைக்கில் தேங்கா பட்டணம் – குழித்துறை சாலையில் சென்றனர். பைக்கை அஷ்வந்த் ஓட்டினார். அனந்தமங்கலம் பகுதியில் செல்லும் போது எதிரே வந்த பைக் ஒன்று மோதியது. இதில் அஷ்வந்த், நிக்சன் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இருவரும் காஞ்சிரகோடு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இது போன்று மோதிய பைக்கில் வந்த பைங்குளம் பகுதி பிரசாந் (29), ஆஷிக் (18) ஆகியோரும் படுகாயமடைந்தனர். அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


