புதுக்கடை, ஜூலை 17 –
புதுக்கடை அடுத்த தேங்காய் பட்டணம் பகுதி கும்பகோடு பின்னக்காட்டு விளை என்ற இடத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மனைவி ஜெனிபா (31). இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று உள்ளது. ஆனால் இதுவரையிலும் இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. இதனால் ஜெனிபா மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று ஜெனிபா வீட்டில் தனியாக இருக்கும்போது, வாழ்க்கையில் வெறுப்புற்று தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். இது குறித்து ராதாகிருஷ்ணன் ஜெனிபாவின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக ஜெனிபாவின் அண்ணன் முருகன் என்பவர் புதுக்கடை போலீசில் புகார் அளித்தார்.
புதுக்கடை இன்ஸ்பெக்டர் மீனா தலைமையிலான போலீசார் சம்பவ இடம் சென்று ஜெனிபா உடலை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


