காவேரிப்பட்டினம், ஏப். 20-
புதிய வக்பு சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து காவேரிப்பட்டினம் அண்ணாநகர் பள்ளிவாசல் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தற்போது அமலில் உள்ள வக்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டு, வக்பு திருத்த மசோதா கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வகுப்பு சட்டத் திருத்த மசோதா 2024 வக்பு சொத்துக்கள் மீதான இஸ்லாமியர்களின் உரிமையை பறிக்கும் வகையிலும், ஆக்கிரமிப்புக்கு துணை போகும் வகையிலும் உள்ளதாகவும், இதனால் இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலங்கள், அடக்கஸ்தலங்கள் மீதான உரிமைகளும் பறிபோக வாய்ப்புள்ளதாக சிறுபான்மை இஸ்லாமிய சமூக மக்கள் அச்சம் தெரிவித்திருந்தனர். அதற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களை எதிர்க்கட்சிகள் நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அண்ணா நகர் பள்ளிவாசல் முன்பு மத்திய அரசு கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. பின்னர் ஊர்வலமாக சென்ற முஸ்லிம்கள், காவேரிப்பட்டணம் பேருந்து நிலையம் அருகில் உள்ள பள்ளிவாசல் முன்பு, காவேரிப்பட்டினத்தில் உள்ள அனைத்து ஜாமாத் சேர்ந்த முஸ்லிம்கள் ஒன்று திரண்டு மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ள வகுப்பு திருத்த சட்டத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் அண்ணாநகர் மஸ்ஜிதே நூரூல்க்ஷீதா பள்ளிவாசல் முத்தவல்லி H.காதர், செயலாளர் அஸ்லம்கான், துணை முத்தவல்லி ஜக்ரியா, உறுப்பினர்கள் கே.எஸ்.அன்வர், துணை செயலாளர் யாரப்ஜான், அமைப்பு செயலாளர் சர்தார், இலியாஸ், ஜாக்கீர், சாஜித், பர்கத், ஷாஜான், பள்ளிவாசல் இமாம், இம்ரான், சாஹிப், மற்றும் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த ஏராளமான முஸ்லிம்கள் உள்ளிட்ட காவேரிப்பட்டினம் அனைத்து ஜாமாத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என ஐநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோசங்கள் எழுப்பினர்.