சிவகங்கை, ஆக. 03 –
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் செய்களத்தூர் கிராமத்தில் புதிய போர்வெல்லுடன் கூடிய குளியல் தொட்டியை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் திறந்து வைத்தார். மானாமதுரை அருகேயுள்ள செய்களத்தூர் வடக்குத் தெருவில் பொதுமக்களின் நலன்கருதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் மானாமதுரை கிழக்கு ஒன்றிய திமுக சுற்றுசூழல் அணி அமைப்பாளர் செங்கிஷ்கான் அவர்களது முயற்சியால் புதிய குளியல் தொட்டி கட்டி முடிக்கப்பட்டது.
இதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஏதுவாக மானாமதுரை கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர், முன்னாள் பேரூராட்சி மன்றத்தலைவர் துரை. இராஜாமணி, முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் கொன்னக்குளம் மலைச்சாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜானகி சுப்பிரமணி, திமுக கிளைக்கழக செயலாளர்கள் கள்ளர் வலசை செல்லம், வலசை முத்துராஜா ஆகியோரது முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினர் கணேசன், இலக்கிய அணி பிரபு உள்ளிட்ட கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.