திருப்பூர், ஜூன் 30 –
நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் சூரிய ஒளி மின்சாரத்திற்கும் 1 ரூபாய் கட்டணம். 3 ஆண்டுகளில் 60 சதவீத மின் கட்டண உயர்வு தொழில் நிறுவனங்களை பாதிப்பதுடன் வேறு மாநிலங்களுக்கு தொழில் இடம் பெயரும் அபாயம் உள்ளதாக மறுசுழற்சி ஜவுளி உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை.
பிளாஸ்டிக் பெட் பாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகளை மறு சுழற்சி செய்து நூலிழைகளாக மாற்றி தண்ணீர் ஜவுளி உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழக அரசின் மின் கட்டண உயர்வு குறித்த ஆலோசனை கூட்டம் திருப்பூர் அக்ரஹாரபுதூர் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட நிர்வாகிகள் மின்கட்டண உயர்வு பெரும் சமமாக உள்ளதாக பேசினர். மாநில தலைவர் ஜெயபால் செய்தியாளர்களிடம் கூறுகையில் கடந்த 3 ஆண்டுகளில் 60 சதவீத மின் கட்டணம் உயர்ந்துள்ளது.
சோலார் பேனல்கள் அமைத்தால் யூனிட்டுக்கு 1 ரூபாய் என நெட்வொர்க் சார்ஜ் வாங்குகிறார்கள். நாங்கள் கடன் வாங்கி எங்கள் கூரை மீது அமைக்கும் சூரிய மின் சக்தி உற்பத்திக்கு அபராதம் விதிப்பதை போல யூனிட்டுக்கு 1 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது குறித்து சிறு குறு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில்
உயர்நீதிமன்ற நீதிபதி இந்த கட்டணத்தை வசூலிக்க கூடாது எனவும் பெறப்பட்ட தொகையை மீண்டும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து மின்சார வாரியம் மீண்டும் மேல் முறையீடு செய்துள்ளது. கடந்த ஆட்சியிலும் மின்வாரியம் தான் திமுக அரசுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த முறையும் மின் துறை தான் தொழில்துறையை பாதிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.
போட்டி மாநிலங்கள் தமிழக தொழில்துறையை மானியம் கொடுத்து அழைக்கும் நிலையில் தமிழகத்தில் தொழில்துறையை தக்கவைக்க மின்கட்டணத்தை உயர்த்த கூடாது என கோரிக்கை மனு அளித்துள்ளோம்.
3 லட்சத்து 50 ஆயிரம் இணைப்பு உள்ளது. 2 கோடி பேர் வேலைவாய்ப்பை பெறுகின்றனர். இந்தியாவில் உள்ள எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களில் 15 சதவீதம் தமிழகத்தில் மட்டும் உள்ளது. முதல்வர் இதனை கவனத்தில் கொண்டு மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்.
அதே போல் பருத்தி விலை சர்வதேச சந்தையில் ஒப்பிடும் போது 20 சதவீத விலை அதிகமாக உள்ளது. எனவே இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.