பரமக்குடி,மே.7 –
நடைபெற்று முடிந்த பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியிடப் பட்டன.இதில் பரமக்குடி நகரில் உள்ள பல்வேறு பள்ளிகளில் பரமக்குடி கீழ முஸ்லீம் மேல் நிலைப் பள்ளி 98 % பெற்று நகரில் முதலிடம் பெற்றுள்ளது.
இப்பள்ளி மாணவி அபிராமி கணிணி அறிவியல் பாடத்தில் 100 க்கு 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.மாணவியையும், தேர்ச்சி சதவீதம் அளித்த ஆசிரியர் பெருமக்களையும் பரமக்குடி கீழ முஸ்லீம் ஜமாத் தலைவர் ஜனாப் சாகுல் கமீது,செயலாளர் எம்.சாதிக் அலி,பள்ளித் தாளாளர் என்.ஷாஜகான் மற்றும் கல்விக் குழு உறுப்பினர்கள்,பள்ளித் தலைமையாசிரியர் எம்.அஜ்மல்கான், உதவி தலைமையாசிரியர் எம்.புரோஷ்கான் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் பாராட்டினர்.



