திருப்பூர், செப்டம்பர் 29 –
தமிழ்நாடு மின் பகிர்மானம் கழகம் திருப்பூர் மின் பகிர்மான வட்டம் அவிநாசி கோட்டம் சார்பில் பதிவு பெற்ற சோலார் வெண்டார்ஸ் மற்றும் வங்கி அலுவலர்கள் பங்குபெறும் மின் நுகர்வோர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் முகாம் திருமுருகன் பூண்டி அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
அதில் பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டம் எவ்வாறு பயன்படுத்துவது குறித்தும், மத்திய அரசு மானியத்தில் 1kw கிலோ வாட் 30 ஆயிரம், 2kw கிலோ வாட் 60 ஆயிரம், 3 kw கிலோ வாட் 78 ஆயிரம் வீடுகளுக்கான பிரதம மந்திரி சூரிய சக்தி மின் திட்டத்தில் சோலார் மேற்கூரைக்கு மானியம் வழங்கப்படுவது குறித்தும், சோலார் மின் திட்டத்திற்கு வங்கிகள் மூலம் கடன் பெறுவது குறிக்கும் நுகர்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



