வேலூர், ஜூலை 21 –
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் அருள்மிகு காளியம்மன் திருக்கோவிலில் 26-ம் ஆண்டு தேர் திருவிழாவினை முன்னிட்டு புதிய நீதிக் கட்சியின் சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நகர செயலாளர் எஸ். ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர் அக்டோபர் 24 மருது இளைஞர் இயக்கத்தின் நிறுவனத் தலைவர், வி.எம். அப்பு பாலாஜி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார். உடன் புதிய நீதிக் கட்சியின் பொறுப்பாளர்கள், பட்டு பாபு, சரவணன், பிரம்மாஸ் செந்தில், மான்ஸ்டர் பிரவீன் குமார், சசிகுமார், உமா மகேஸ்வரி, சத்தியமூர்த்தி, கன்னியப்பன், இளஞ்செழியன், சரத்குமார், மோகன், அன்பு, வினோத் குமார், நந்தகுமார், செல்வம், சீனிவாசன், கல்பனா, நித்தியா மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.