களியக்காவிளை, நவ. 13 –
பா.ஜ.க. குமரி மேற்கு மாவட்ட தலைவர் சுரேஷ், மாவட்ட பொதுச் செயலாளர் நந்தினி, மண்டல பார்வையாளர் விஜி ஒப்புதலுடன் மேல்புறம் தெற்கு ஒன்றிய பா.ஜ.கட்சியின் ஒன்றிய பிரிவு அமைப்பாளர்களை ஒன்றிய தலைவர் சரவண வாஸ் நாராயணன் கீழ் குறிப்பிடும் நபர்களை அறிவித்துள்ளார்.
வழக்கறிஞர் பிரிவு தலைவராக வன்னியூர் ஊராட்சியை சார்ந்த அஜீஸ், தொழில் நுட்ப வல்லுனர் பிரிவு களியக்காவிளை பேரூராட்சி அசோக் குமார், தொழில் பிரிவு இடைக்கோடு பேரூராட்சியை சார்ந்த சங்கர், கூட்டுறவு பிரிவு பளுகல் பேரூராட்சி சதீஷ்குமார், முன்னாள் இராணுவ பிரிவு இடைக்கோடு பேரூராட்சி பிஜு, கலை கலாச்சார பிரிவு மலையடி ஊராட்சி ராஜ்குமார், நெசவாளர் பிரிவு இடைக்கோடு பேருராட்சி சோபகுமார், மீனவர் பிரிவு களியக்காவிளை பேருராட்சி தாஸ், சுற்றுச் சூழல் பாதுகாப்பு பிரிவு பாகோடு பேருராட்சி சுஜின், அரசு தொடர்பு பிரிவு களியக்காவிளை பேருராட்சி பென்னட்ராஜ், தேசிய மொழிகள் பிரிவு இடைக்கோடு பேருராட்சி தீஷ்குமார் , ஆன்மிகம் கோயில் மேம்பாடு பளுகல் பேருராட்சி ஷாஜி, விளையாட்டு மற்றும் திறன் மேம்பாடு பாகோடு பேருராட்சி மணிகண்டன், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு களியக்காவிளை பேருராட்சி குணசீலன், பிரச்சார பிரிவு பாகோடு பேருராட்சி ரமேஷ், தமிழ் இலக்கியம் வளர்ச்சி பிரிவு களியக்காவிளை பேரூராட்சி ஹரிஷ், தன்னார்வ தொண்டு நிறுவன பிரிவு இடைக்கோடு பேருராட்சி ஸ்ரீகுமார், அயலக தமிழர் பிரிவு மருதங்கோடு ஊராட்சி வீரப்பன், அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு இடைக்கோடு பேருராட்சி அஜி குமார், ஓய்வு வெற்ற அரசு ஊழியர்கள் பிரிவு பாகோடு பேருராட்சி பாலகிருஷ்ணன், வர்த்தக பிரிவு இடைக்கோடு பேருராட்சி விஜயகுமார், பொருளாதார பிரிவு மருதங்கோடு ஊராட்சி சஞ்சய் குமார், சமூக ஊடகப்பிரிவு விளவங்கோடு ஊராட்சி சுபின் குமார், தகவல் மேலாண்மை இடைக்கோடு பேருராட்சி விஜின், மத்திய அரசின் நலத்திட்டங்கள் பாகோடு பேருராட்சி சிவகுமார் உள்ளிட்டோர் அறிவிக்கப்பட்டனர்.



