நீலகிரி. ஏப்ரல்.13
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், மேங்கோரஞ் எஸ்டேட் மருத்துவமனை ஆல் தி சில்ட்ரன் ஆகியன சார்பில் நீலகிரி பந்தலூர் அருகேயுள்ள சோலாடி பழங்குடியினர் பள்ளியில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் பள்ளி ஆசிரியர் பிரகாசன் தலைமை தாங்கினார். ஆல் தி சில்ட்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் முன்னிலை வகித்தார். கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் செயலாளர் சிவசுப்பிரமணியம் முகாமினை துவக்கி வைத்தார்.
மேங்கோரஞ் எஸ்டேட் மருத்துவமனை மருத்துவர் ஷர்மிளா தலைமையில் மருந்தளுனர் ரமேஷ், முரளிதரன் அடங்கிய மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்க சிகிச்சை அளித்தனர்.
100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு எடை, கண் காது, பல், இரத்த அழுத்தம் உள்ளிட்டவை பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டது. சளி காய்ச்சல், காது வலி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு உடையவர்களுக்கு மாத்திரைகள் வழங்கபட்டது.க நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டு மருத்துவ சிகிச்சை பெற்று பயனடைந்தனர்.



