தஞ்சாவூர், ஜூன் 24 –
தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட – மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் (2025-2026)ஆம் கல்வி ஆண்டில் அரசு பொதுத் தேர்வில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளைச் சார்ந்த 42 மாணவ – மாணவிகளுக்கும் மற்றும் 100 சதவீதம்தேர்ச்சியை வழங்கிய 15 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி பாராட்டு விழா நடத்தி வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிகழ்வில் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ராஜமாணிக்கம், தலைமை செயற்குழு உறுப்பினர் தலையாமங்கலம் பாலு, ஒன்றிய கழக செயலாளர்கள் முத்துவேல், சித்தேரி சிவா, கவியரசு, நகர செயலாளர் வீரா கணேசன், நகர்மன்ற தலைவர் சோழராஜன், மாவட்ட அணி அமைப்பாளர்கள் சோபா கணேசன், மீனாட்சி சூர்யபிரகாஷ் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



