பரமக்குடி, ஜூலை 12 –
பரமக்குடி மேற்கு ஒன்றியத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் குருபூஜை விழாவை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் 268-வது குருபூஜை விழா பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சுமார் 10 இடங்களுக்கு மேல் நடைபெற்றது. பரமக்குடி மேற்கு ஒன்றியம் இலந்தைகுளம் மற்றும் இடையர் குடியிருப்பு பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குருபூஜை விழாவில் கலந்துகொண்ட பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் வீரன் அழகுமுத்துக்கோன் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் பரமக்குடி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, போகலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், பரமக்குடி மேற்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் மயில்வாகனன், தமிழ்நாடு யாதவ மகாசபை ராமநாதபுரம் மேற்கு மாவட்டத் தலைவர் கேசவன், பரமக்குடி மேற்கு ஒன்றிய அவைத் தலைவர் சமயன், ஒன்றிய துணைச் செயலாளர் பிச்சைமுத்து, மாவட்ட பிரதிநிதி வேலாயுதம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தமிழ்நாடு யாதவ மகாசபையின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.