பரமக்குடி, ஜூலை 21 –
பரமக்குடி தமிழ் மாநில காங்கிரஸ் கவுன்சிலர், திமுக மாவட்ட செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். திமுக சார்பில் தமிழக முழுவதும் ஓரணியில் தமிழகம் என்ற திட்டத்தின் கீழ் உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் நான்கு தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடி மையங்களின் அடிப்படையில் ஒன்றியம், நகர, பேரூர் கழகம் சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் வேகமாக நடைபெற்று வருகிறது. தலைமை கழகம் கொடுத்துள்ள இலக்கை விட அதிகமாக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் பரமக்குடி நகராட்சி ஏழாவது வார்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கவுன்சிலர் குபேந்திரன் அக்கட்சியிலிருந்து மாவட்ட செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இந்த நிகழ்ச்சியில் பரமக்குடி எம்எல்ஏ முருகேசன், நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி, முன்னாள் அமைச்சர் சுந்தர்ராஜன், வடக்கு நகர் செயலாளர் ஜீவரத்தினம், கவுன்சிலர்கள் கிருஷ்ணன், சதீஷ்குமார், பரமக்குடி தெற்கு நகர் இளைஞர் அணி அமைப்பாளர் துரைமுருகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.