தக்கலை, ஜூன் 28 –
பத்மநாபபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு ஜூன் 24 அன்று வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது. தக்கலை வழக்கறிஞர் ஜஸ்டின் என்பவர் மீது தக்கலை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்ததை கண்டித்தும், பதிவு செய்த வழக்கை காவல்துறையினர் ரத்து செய்ய கேட்டும் காவல்துறை குற்றவாளிகள் பதிவேட்டில் பெயர் பதிவு செய்ததை கண்டித்தும் பத்மநாபபுரம் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சார்பில் காவல்துறைக்கு எதிராக நேற்று கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பத்மநாபபுரம் வழக்கறிஞர் சங்க தலைவர் பொன்ராஜ் தலைமை வகித்தார். துணை தலைவர் ஜஸ்டின் ராஜன், செயலாளர் பெஞ்சமின் ரொனல்டு, பொருளாளர் ஆன்றனி, முன்னாள் சங்க தலைவர்கள் பால்பிள்ளை, குமரி மு. ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாகர்கோவில் வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவர்கள் மரிய ஸ்டிபன், ஜெயக்குமார் மற்றும் வழக்கறிஞர் ஜெயசந்திரன், ஆன்றோ கிளிட்டஸ், பூதப்பாண்டி வழக்கறிஞர் சங்க தலைவர் ரெஜினால்டு ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
வழக்கறிஞர் சங்க செயற்குழு உறுப்பினர்கள் ஜஸ்டின், சிவகுமார், கோபன், ஜின் ஜெப்ரின் ஜோஸ், துணை செயலாளர் பிரபின், சங்க முன்னாள் துணை தலைவர் ஏசுராஜா, முன்னாள் சங்க தலைவர் தினேஷ், வழக்கறிஞர்கள் முத்து குமரேஷ், மஹாராஜா, ஜான் இக்கினிசியஸ், வில்பர்ட், டாம் டிக்சன், விஜயகுமார், வெங்கடாச்சலம் மற்றும் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தையொட்டி நேற்று வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்தனர். இதனால் நீதிமன்ற பணிகள் முடங்கியது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பத்மநாபபுரம் வழக்கறிஞர் சங்க தலைவர் பொன்ராஜ் தலைமை வகித்தார். துணை தலைவர் ஜஸ்டின் ராஜன் செயலாளர் பெஞ்சமின் ரொனல்டு, பொருளாளர் ஆன்றனி முன்னாள் சங்க தலைவர்கள் பால்பிள்ளை, குமரி மு ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் சங்க தலைவர் பொன்ராஜ், நாகர்கோவில் வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவர்கள் மரிய ஸ்டிபன், ஜெயக்குமார் மற்றும் வழக்கறிஞர் ஜெயசந்திரன், ஆன்றோ கிளிட்டஸ், பூதப்பாண்டி வழக்கறிஞர் சங்க தலைவர் ரெஜினால்டு ஆகியோர் தக்கலை வழக்கறிஞர் ஜஸ்டின் மீது தக்கலை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்ததை கண்டித்து பேசினார்கள். பதிவு செய்த வழக்கை காவல்துறையினர் ரத்து செய்ய வேண்டும். காவல்துறை குற்றவாளிகள் பதிவேட்டில் பெயர் பதிவு செய்ததை கண்டித்தும் வழக்கறிஞர்கள் தக்கலை காவல்துறைக்கு எதிராக கேnஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வழக்கறிஞர் சங்க செயற்குழு உறுப்பினர்கள் ஜஸ்டின், சிவகுமார், கோபன், ஜின் ஜெப்ரின் ஜோஸ், துணை செயலாளர் பிரபின், சங்க முன்னாள் துணை தலைவர் ஏசுராஜா, முன்னாள் சங்க தலைவர் தினேஷ், வழக்கறிஞர்கள் முத்து குமரேஷ், மஹாராஜா, ஜான் இக்கினிசியஸ், வில்பர்ட், டாம் டிக்சன், விஜயகுமார், வெங்கடாச்சலம் மற்றும் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். நேற்று வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நீதிமன்ற பணிகள் முடங்கியது.