பணகுடி, செப். 27 –
பணகுடி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரி நாட்டு நலப் பணித்திட்டத்தின் சார்பில் சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில் நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் முனைவர் இரா. திலகா வரவேற்புரை ஆற்றினார். தொடர்ந்து கல்லூரியின் முதல்வர் முனைவர் நீல. மாதவன் தலைமை உரை ஆற்றினார்.
அதனைத் தொடர்ந்து ராதாபுரம் சுஸ்லான் குளோபல் சர்வீஸ் லிமிடெட் மருத்துவ அலுவலர் டாக்டர் லோகாதேவி சித்த மருத்துவம் பற்றியும் சித்த மருத்துவம் மூலம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வழிமுறைகள் பற்றியும் வாதம், பித்தம், கபம் குறித்தும், தாவரங்கள், விலங்குகள் மற்றும் பூச்சிகளில் இருந்து என்னென்ன மருந்துகள், என்னென்ன நோய்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறித்தும், இன்றைய காலகட்டத்தில் மக்களை அதிகமாக பாதிக்கக்கூடிய மாரடைப்பு, கேன்சர் மற்றும் சிறுநீரக பாதிப்பு போன்ற நோய்கள் வருவதற்கான காரணங்கள் குறித்தும், அவற்றிற்கான முதல் உதவிகள் பற்றியும் விளக்கிக் கூறினார்.
அதனைத் தொடர்ந்து ராதாபுரம் சுஸ்லான் குளோபல் சர்வீஸ் லிமிடெட் மனிதவள அலுவலர் அன்னபூரணி சிறப்புரை ஆற்றினார். நிகழ்வின் இறுதியில் வணிகவியல் துறைப் பேராசிரியர் முனைவர் லவ்லி கிறிஸ்டி நன்றியுரை கூறினார். நிகழ்வினைத்
தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் செ. ரேணுகா தொகுத்து வழங்கினார். முகாமினை நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் முனைவர் இரா. திலகா ஒருங்கிணைத்திருந்தார். முகாமில் கல்லூரிப் பேராசிரியர்களும், மாணவர்களும் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.



