மங்கலம், ஜூலை 14 –
நொய்யல் ஆறு கோயம்புத்தூர் மாவட்டம் வெள்ளியங்கிரி மலையில் உருவாகி கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மாவட்டங்கள் வழியாக 180 கிலோமீட்டர் தூரம் வரை பயணித்து நொய்யல் பகுதியில் காவிரி ஆற்றில் கலக்கிறது. திருப்பூரின் காஞ்சி மாநதி என்று அழைக்கக்கூடிய நொய்யலாறு தற்போது மண்ணும், மனிதனும் பயன்படுத்த முடியாத அளவுக்கு விஷமாகி வருகிறது. ஆற்றில் கழிவு நீரும், பிளாஸ்டிக் கழிவுகளும், பல இடங்களில் ஆற்றை மறித்து ஆக்கிரமிப்புகளும், ஆகாயத்தாமரை சூழ்ந்து காணப்படுவதால் ஆறு மாசடைந்து காணப்படுகிறது. ஆற்றின் ஓரத்தில் தொழிற்சாலை கழிவுகள், மருத்துவ கழிவுகள், குடியிருப்பு கழிவுகள் நேரடியாக நொய்யல் ஆற்றில் கலப்பதால் நொய்யல் ஆற்றுப்படுகையில் வசிக்கும் மக்களுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சில சாய, சலவை தொழிற்சாலைகள் டன் கணக்கில் விஷத்தன்மை வாய்ந்த அபாயகரமான சாய கழிவுகள் நொய்யல் ஆற்றின் கிளை வாய்க்கால் ஓரங்களில் சாய கழிவுகளை கொட்டி வைத்தும் விதிமீறலில் ஈடுபடுகின்றனர். நொய்யலை பாதுகாக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை அரசுக்கு மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளாமல் இருந்து வருவதால் மாசடைந்து வரும் நொய்யல் ஆற்றை காப்பாற்ற கோரி விவசாய அமைப்புகள் ஒன்றிணைந்து திருப்பூர் அருகே மங்கலத்தில் நொய்யல் நதி மாசடைந்து நொய்யல் நீர் பயன்படுத்துவதற்கு அற்ற தண்ணீராக மாறி புற்றுநோய் அபாயமும் ஏற்பட்டுள்ளது. நொய்யல் நதியை காப்பாற்ற வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர்கள், விவசாய அமைப்புகள் சமூக ஆர்வலர்கள் பல்வேறு அரசியல் கட்சியினர்கள் பங்கேற்பு.
இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு தனியார் இடத்தில் பந்தல் அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இந்த போராட்டத்தை கைவிடக் கோரியும் நொய்யல் ஆற்றில் குப்பை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியர் மோகனசுந்தரம் தலைமையில் தெற்கு வட்டாட்சியர் சரவணன் மற்றும் காவல் உதவி ஆணையர் ஜான், ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன் ஆகியோர் போராட்ட குழுவினர் உடன் நள்ளிரவில் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் காலை நொய்யல் ஆற்றில் தூய்மை பணி செய்து தரப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. முதலில் தூய்மை பணியை துவங்குங்கள் என கூறி விவசாயிகள் அறிவித்தபடி நொய்யல் நதி காப்பாற்ற கோரி அறிவித்தபடி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து விவசாய அமைப்புகள் நொய்யல் நதியை மீட்க கோரி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.