திருப்பூர் மே.4
புதிய பேருந்து நிலையம் அருகில் பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை கோடை காலம் என்பதால் மக்களின் தாகம் தணிக்க நீர் மோர் பந்தல் அனைத்து பகுதிகளிலும் அமைக்க வேண்டும் என்கின்ற அறிவுறுத்தலின் படி மாவட்ட தலைவர் செந்தில்வேல் ஜி அவர்களின் தலைமையில் எம் எஸ் நகர் மண்டல தலைவர் வேலுச்சாமி ஏற்பாட்டில் திருப்பூர் புதிய பேருந்து நிலையம் முன்பு நீர் மோர் பந்தல் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாநிலச் செயலாளர் மலர்கொடி மாநில செயற்குழு உறுப்பினர் சின்னச்சாமி மாவட்ட துணை தலைவர் T.M.தங்கராஜ் மாவட்ட பொது செயலாளர்கள் சீனிவாசன் பாலசுப்பிரமணியம் மாவட்டச் செயலாளர் சுமதி மாநில மாவட்ட மண்டல அணி பிரிவு நிர்வாகிகளும் தலைவர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.