தென்தாமரைகுளம், ஜூலை 9 –
தமிழக அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற பணியாளர்கள் கூட்டமைப்பின் நாகர்கோவில் மண்டல ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவில் பிஷப் ஹவுஸ் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் ஆதித்தன் தலைமை வகித்தார். செயலர் ஹென்றி, பொருளாளர் மரியதாசன், ஒருங்கிணைப்பாளர் சைமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்தக் கூட்டத்தில் 93 ஆயிரம் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் மேம்பட மீதம் உள்ள டி.ஏ வை உடனே வழங்கவும் 2013, 2016, 2019, 2023 செற்றில்மென்ட் பணபலன்களை விரைவில் வழங்கவும் 31.7.2023 முதல் 30.4.2025 வரை பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பண பலன்களை உடனே வழங்க வேண்டியும் தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 250க்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.