திண்டுக்கல், ஆக.8 –
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் தெற்கு ஒன்றிய திமுகவினர் சார்பில் முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் ஏழாவது நினைவு தினத்தை முன்னிட்டு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமி உத்தரவுப்படி மாவட்ட கழக செயலாளரும் பழனி எம்எல்ஏ வுமான ஐ.பி. செந்தில்குமார் வழிகாட்டுதலின்படி நகர செயலாளர் ஜோசப் கோவில் பிள்ளை தலைமையில் ஒன்றிய செயலாளர் மணிகண்டன் முன்னிலையில் பஸ் நிலையத்தில் இருந்து ஏராளமான திமுகவினர் மௌன ஊர்வலமாக வந்து நால்ரோடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் அவைத் தலைவர் கட்டாரி, நகர துணைத் தலைவர் கதிரேசன், கவுன்சிலர்கள் காளிமுத்து, செந்தில், சிலம்பு செல்வன் உட்பட இளைஞர் அணி பொறுப்பாளர்கள், மாவட்ட ஒன்றிய பேரூர் கழகப் பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.