By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாட்டுபடகு மீனவர்களுக்கு 350ல் இருந்து 500 ஆக டீசல் உயர்த்தப்படும்; பழுதடைந்த படகுகளை மீட்க சிலுவை படகு அமைக்கப்படும்: மீனவ மக்களிடம் வாக்கு சேகரித்த விளாத்திகுளம் அதிமுக வேட்பாளர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > நாட்டுபடகு மீனவர்களுக்கு 350ல் இருந்து 500 ஆக டீசல் உயர்த்தப்படும்; பழுதடைந்த படகுகளை மீட்க சிலுவை படகு அமைக்கப்படும்: மீனவ மக்களிடம் வாக்கு சேகரித்த விளாத்திகுளம் அதிமுக வேட்பாளர்
அரசியல்தமிழ்நாடுதூத்துக்குடி

நாட்டுபடகு மீனவர்களுக்கு 350ல் இருந்து 500 ஆக டீசல் உயர்த்தப்படும்; பழுதடைந்த படகுகளை மீட்க சிலுவை படகு அமைக்கப்படும்: மீனவ மக்களிடம் வாக்கு சேகரித்த விளாத்திகுளம் அதிமுக வேட்பாளர்

Last updated: April 20, 2026 6:31 pm
April 20, 2026
23 Views
Share
SHARE

விளாத்திகுளம், ஏப்ரல் 20 –

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிடும் சத்யா தேசிய ஜனநாயக கட்சி கூட்டணியினருடன் இணைந்து வேம்பார் கிராமத்தில் உள்ள கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து வேம்பார் வேம்பார் பேருந்து நிலையம், சிலுவைபுரம், கலைஞானபுரம், பெரியசாமிபுரம், குஞ்சையாபுரம், பச்சையாபுரம் உள்ளிட்ட மீனவ மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய சத்தியா: நாட்டுப் படகு மீனவர்களுக்கு 350ல் இருந்து டீசல் 500 லிட்டராக உயர்த்தப்படும். விற்பனை வரிரத்து செய்யப்பட்ட எரிபொருள் மாதம் 4000 லிட்டர் வீதம் மேம்படுத்து தொழிலுக்காக வழங்கப்படும். கடலிலே மீன் பிடிக்கின்ற பொழுது விபத்துக்குள்ளாகி மீட்கப்படாமல் இருக்கின்ற மீனவர்களின் குடும்பங்களுக்கும், மருத்துவ வசதி வழங்கப்படாமல் நோயினால் கடலில் உயிரிழக்கின்ற மீனவர்களின் குடும்பங்களுக்கும் விபத்து காப்பீடாக 25 லட்சம் வழங்கப்படும்.

கடலிலே பாதிப்புக்குள்ளாக கூடிய மீனவர்களையும் மீன்பிடி படகுகளையும் மீட்பதற்கு மீனவ மீட்பு குழு ஏற்படுத்தப்படும். கடலில் பழுதடைந்த படகுகளை மீட்க கடற்கரைப் பகுதியில் இழுவைபடகு அமைக்கப்படும். மழை வெள்ள காலங்களில் முகத்துவாரம் தூர்வாரப்படும். மேம்பாடு பகுதியில் கூடுதலாக தூண்டில் வளைவு பாலம் அமைக்கப்படும். மீனவர்களுக்கு மானியத்துடன் கூடிய கடன் வசதி வழங்கப்படும். உள்நாட்டு மீனவர்கள் நலன் கருதி ஏரிகளிலும் குளங்களிலும் மீன் வளர்ப்பை ஊக்கப்படுத்த சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.

குளங்களிலும் ஆறுகளிலும் உள்நாட்டு மீனவர்கள் சிரமம் இன்றி மீன் பிடிக்க மீனவர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வலை மற்றும் உபகரணங்கள் விலையில்லாமல் வழங்கப்படும். 65 வயதுக்கு மேற்பட்ட மீனவர்களுக்கு மீனவர் நலவாரியம் மூலம் மாதம் 2500 ரூபாய் ஓய்ஊதியம் வழங்கப்படும்.

அதேபோல் திமுக ஆட்சியில் பெண்களுக்கான பாதுகாப்பு தற்போது வரை கேள்விக்குறியாக உள்ளதாகவும், எங்கு பார்த்தாலும் போதை கலாச்சாரத்தினால் சட்ட ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளது,எனவே மக்களுக்கான நல்லாட்சி அமைந்திட இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு சத்யா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இந்நிகழ்வில் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், பாஜக மாவட்ட செயலாளர் சரவணன் கிருஷ்ணன், பாஜக தெற்கு ஒன்றிய தலைவர் சுயம்பு, தெற்கு ஒன்றிய பார்வையாளர் பார்த்திபன், கந்தசாமி அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம், கணபதி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம் அருகே பெண் நடன கலைஞரை திருமணம் செய்து கொள்ளவதாக கர்ப்பமாக்கிய இன்ஜினியர் கைது
குளச்சல் கடலோரப் பகுதியில் புகையிலை விற்பனை செய்த 2 கடைகளுக்கு சீல் : உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை
‘மைஸ்த்’ 100வது ஆண்டு சர்வதேச மாநாடு: 19ம் தேதி நாகர்கோவிலில் இருந்து பிரச்சார பயணம் துவங்குகிறது
கருங்கல் அருகே அடகு கடை நடத்தி 75 பேரிடம் மோசடி; ஒருவர் கைது
தருமபுரி சட்டமன்றத் தொகுதியில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி தீவிர வாக்கு சேகரிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சேலம்

பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காமராசர் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது

July 17, 2025
57 Views
தபால் வாக்குகள் எண்ணுவது பற்றிய குறித்த பயிற்சி வகுப்பு
திருமங்கலம் தற்காலிக பேருந்து நிலையம் சேறும் சகதியுமாக இருப்பதால் பயணிகள் அவதி
தொழுநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
ஒருங்கிணைந்த சமுதாய வளைகாப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account