தென்தாமரைகுளம், ஜூலை 22 –
நாஞ்சில் கத்தோலிக்க கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சமூகப்பணித் துறை சார்பில் நான்கு நாட்கள் சமூகப் பணி பற்றிய வழிகாட்டுதல் கருத்தரங்குகளும் புதிய மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வும் நடைபெற்றது.
முதல் நாள் சமூகப்பணியின் வேலை வாய்ப்புகள் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பேராசிரியர் முனைவர் ஜார்ஜ் டேவிட் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இரண்டாவது நாள் சமூகப்பணியில் சிறுபயிற்சிகள் என்ற தலைப்பில் மனநல ஆலோசகர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீஜா கோபால் மற்றும் ஆலோசகர் மற்றும் மனநல நிபுணர் வழக்கறிஞர் புஷ்பா குமாரி ஆகியோர் உரையாற்றினர்.
மூன்றாவது நாள் ரேஷ்மா ராஜு எழுத்து மற்றும் பேச்சுத் திறனை மேம்படுத்தும் பயிற்சி வழங்கினார். அதே நாளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சியும் கொண்டாடப்பட்டது. நான்காவது நாள் சீட்ஸ் நிறுவன மேலாளர், எம். ஜான் செல்வின் சமூகப்பணியில் ஆவணப்படுத்தலின் முக்கியத்துவம் குறித்து கருத்தரங்கம் நடத்தினார்.
இந்நிகழ்வுகளில் கல்லூரி தாளாளர் அருட்பணி முனைவர் சி. ஸ்டீபன் மற்றும் முதல்வர் முனைவர் எம். அமலநாதன் ஆகியோர் தலைமையேற்று நிகழ்ச்சிகளை சிறப்பித்தனர். நான்கு நாட்களாக நடைபெற்ற இந்த நிகழ்வுகள் சமூகப்பணித் துறையினரால் ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி புதிய மாணவர்களுக்கு சமூகப்பணித் துறையின் திசை தெரிவு, தொழில்நுட்பப் பயிற்சி மற்றும் மாணவர் உறவுகளை மேம்படுத்தும் ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது.