நாகர்கோவில், ஜூலை 26 –
நாகர்கோவில் மாநகராட்சி 13-வது வார்டுக்கு உட்பட்ட வடசேரி சோழ ராஜா கோவில் எம்.எம்.ஐ. ஆடிட்டோரியத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நேற்று நடந்தது. இந்த முகாமை கலெக்டர் அழகு மீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து கலெக்டர் கூறியதாவது: முகாம் செயல்பாடுகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் கேட்டறியப்பட்டது. அப்போது தகுதியானவர்களுக்கு உடனே ஆணை வழங்கிட அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ந்து முகாமில் பங்கேற்ற பொதுமக்களின் கோரிக்கைகள் கேட்டறியப்பட்டது. பதில் கிடைக்கப் பெறாத பொதுமக்கள் தங்களை நாடி வந்து கேட்கும் போது தகுந்த பதில்களை அவர்களுக்கு வழங்குவதோடு தேவையான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்று துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுத்தப்பட்டது என்றார்.