நாகர்கோவில், ஜன. 14 –
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் “விபத்தில்லா குமரி மாவட்டம்”
என்ற குறிக்கோளுடன் பல்வேறு விபத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில் எஸ் பி ஸ்டாலின் உத்தரவின் பேரில் நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் சிவசங்கரன் மேற்பார்வையில், போக்குவரத்து ஆய்வாளர் பேச்சிமுத்து, தலைமையில் நாகர்கோவில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் சுமித் ஆல்ட்ரின் மற்றும் காவலர்கள் மாநகர் பகுதியில் விபத்து தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாகன சோதனை நடத்தினர்.
அப்போது, போக்குவரத்து விதிமுறைகளை மீறியும் பதிவு எண் இல்லாதது, ஓட்டுநர் உரிமம் இல்லாதது, ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியது, குடி போதையில் வாகனம் ஓட்டியது போன்றவைகள் கண்டுபிடிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் பதிவெண் பலகைகள் பொருத்தி அபராதம் செலுத்திய பின்னர் வாகனம் ஓட்டுநர் வசம் ஒப்படைக்கபட்டது. ஒரே நாளில் 200 மேற்பட்ட மோட்டார் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 184500/– ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.



