நாகர்கோவில், ஆக. 3 –
நாகர்கோவில் மாநகர பகுதிகளான வடசேரி, ஒழுகினசேரி பகுதிகளில் நேற்று முன்தினம் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இந்த பகுதிகளில் இரண்டு சிறுவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களின் பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 12 சிறுவர்களின் பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு மொத்தம் ரூ. 3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஒழுகினசேரி பகுதியில் மது போதையில் வாகனம் ஓட்டியதாக 2 ஆட்டோ மற்றும் 3 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்து சம்பந்தப்பட்டவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.