நாகர்கோவில், ஆகஸ்ட் 8 –
கோட்டாறு ரயில்வே ரோடு பகுதியில் நேற்று முன்தினம் மதுவிலக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு சந்தேகப்படும்படியாக 3 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை சோதனை செய்தபோது அவர்களிடம் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதை அடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் தடிக்காரன்கோணத்தை சேர்ந்த ஆகாஷ் (24), எட்டாமடையைச் சேர்ந்த விஷ்ணு (19), வேர்கிளம்பியை சேர்ந்த சர்ச்சின் (19) என்பது தெரியவந்தது. அவர்களிடம் கஞ்சா எங்கிருந்து வாங்கப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கைது செய்யப்பட்ட ஆகாஷ் மீது ஏற்கனவே ஆரல்வாய்மொழி, பூதப்பாண்டி, கோட்டாறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன.


