நாகர்கோவில், செப்டம்பர் 12 –
தமிழ்நாட்டில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு அரசு ஏற்கனவே அறிவித்த 16 சதவீத ஊதிய உயர்வை முறைப்படி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் தமிழ்நாடு முழுவதும் நேற்று ஆர்ப்பாட்ட போராட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகர்கோவிலில் அண்ணா ஸ்டேடியம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மகிழ்ச்சி தலைமை வைத்தார். செயலாளர் ராஜேஷ், பொருளாளர் சுபாஷ் மற்றும் நிர்வாகிகள், 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
மாநிலச் செயலாளர் காளிதாஸ், பொருளாளர் சாமிவேல் ஆகியோர் கோரிக்கைகளை விலகி பேசினர். ஆர்ப்பாட்டத்தின் போது 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர். தங்களது கோரிக்கை நிறைவேறவில்லை எனில் அடுத்த மாதம் 18ம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.



