நாகர்கோவில், செப்டம்பர் 13 –
நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் குமரி மாவட்ட கைப்பந்து கழகம், டாக்டர் ஜெயசேகரன் மருத்துவ அறக்கட்டளை இணைந்து பள்ளி கல்லூரி கிளப்புகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டியை மூன்று நாட்கள் நடத்துகிறது. முதல் நாளான நேற்று பள்ளி மாணவ மாணவிகளுக்கான போட்டி நடந்தது. 30க்கும் மேற்பட்ட அணிகள் இதில் பங்கேற்றன. மாவட்ட விளையாட்டு அலுவலர் வினு தலைமை தாங்கினார். குமரி மாவட்ட கைப்பந்து கழக துணைத் தலைவர் அசோக்ராஜ் வரவேற்று பேசினார். குமரி மாவட்ட கைப்பந்து கழக செயலாளர் ரத்தின பாண்டியன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் நாராயணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வருகிற 16ம் தேதி கல்லூரி மாணவ மாணவிகளுக்கான போட்டி நடைபெறுகிறது. போட்டியை மாநகராட்சி கவுன்சிலர் ஸ்ரீ லிஜா தொடங்கி வைக்கிறார். 17ம் தேதி கிளப்புகளுக்கான போட்டி நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு பரிசளிப்பு விழா நிகழ்ச்சி நடக்கிறது. விழாவில் மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு சுழற் கோப்பையும் பரிசுகளையும் வழங்குகிறார்.



