பி.என். ரோடு, ஜூலை 22 –
திருப்பூர் மாவட்ட நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு நாளை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட சிவாஜி மன்ற தலைவர் சிவாஜி துரை தலைமையில் 24-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. பி.என். ரோடு பேருந்து நிறுத்தம் அருகில் நடிகர் திலகம்
செவாலியே சிவாஜி கணேசன் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆர். கிருஷ்ணன் அறிவுறுத்தலின்படி துணைத் தலைவர் கே. கதிரேசன் ரத்தினசாமி, சாமிநாதன், முருகேசன், சுந்தரம், குமார், சிவக்குமார், நல்லூர் நடராஜ்,
நடராஜ் (எ) மணி மற்றும் 50க்கு மேற்பட்ட சிவாஜி ரசிகர்கள், தோழர்கள் கலந்து கொண்டனர்.