வேலூர், ஆகஸ்ட் 03 –
வேலூர் மாவட்டம், வேலூர் பிரசிடென்சி ரோட்டரி சங்கம் ,சென்னை டாக்டர் அகர்வால் கண் ஆராய்ச்சி மையம், குறிஞ்சி இன்டர்நேஷனல் டிரஸ்ட் கிருஷ்ணகிரி மற்றும் வேலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் வேலூர் அடுத்த தொரப்பாடி வள்ளலார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்கள் வழக்கறிஞர்கள் ரவி , சிவகுமார் ஆகியோர் முகாமில் கலந்து கொண்டு கண் சிகிச்சை முகாமினை துவக்கி வைத்தனர் உடன் ரோட்டரி தலைவர் ரமேஷ், செயலாளர் நரேந்திரபாபு, பொருளாளர் கார்த்திகேயன் ,சமுதாயப் பணி மருத்துவம் இயக்குனர் டாக்டர் வச்சலா ஸ்ரீ, சங்கப்பணி இயக்குனர் ராஜசேகர், மற்றும் வேலூர் பிரசிடென்சி ரோட்டரி சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், பலர் கலந்து கொண்டனர்.