சங்கரன்கோவிலில்
தென்காசி வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் வைத்து வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ செய்தியாளர்களை சந்தித்தார், அப்பொழுது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
ஒன்றிய பாஜக அரசு தொகுதி மறு சீரமைப்பு என்ற பெயரில் மக்கள் தொகை கணக்கீடு அடிப்படையில் தென் மாநிலங்களில் உள்ள நாடாளுமன்ற மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை குறைக்க சூழ்ச்சி செய்கிறது எனவும், ஒன்றிய அரசின் தொகுதி மறுசீரமைப்பை தமிழ்நாடு முதலமைச்சர் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தினார். இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 63 கட்சிகளில் 58 கட்சிப் பிரதிநிதிகள், பல்வேறு மாநில முதலமைச்சர்கள் பல்வேறு மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர். இதன் மூலம் இந்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பை அனுமதிக்க முடியாது என்ற என்பதை தமிழ்நாடு முதலமைச்சர், திமுக தலைவர் முக ஸ்டாலின் முன்னெடுத்து இதனை அனுமதிக்க கூடாது என்பதில் உறுதியாக உள்ளார்.1971 ம் ஆண்டு தொகுதி மறு சீரமைப்பு சட்டம் மக்கள் தொகை அடிப்படையில் கொண்டு வரப்பட்டது. அப்பொழுது தென் மாநிலங்களில் 23.41 சதவிகிதமும், வட மாநிலங்களில் 24.39 சதவிகிதமும் இருந்த மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி சீரமைக்கப்பட்டது. தொடர்ந்து இந்தியாவில் மக்கள் தொகை குறைப்பதற்கான ஒன்றிய அரசின் நடவடிக்கைகளில் தென் மாநிலங்கள் முறையாக பின்பற்றியதின் அடிப்படையில் தென் மாநிலங்களில் தற்போது 12. 59 சதவீதமாக குறைந்துள்ளது. ஆனால் வட மாநிலங்களில் மக்கள் தொகை உழைப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படாததால் இப்போது 21.83 சதவீதமாக அதிகரித்துள்ளது இதன் அடிப்படையில் தற்போது ஒன்றிய அரசு தொகுதி மறு சீரமைப்பை கொண்டு வர முயற்சி செய்கின்றது. இதனால் தமிழ்நாட்டில் தற்போதைய இருக்கக்கூடிய 39 நாடாளுமன்ற தொகுதிகளில் 8 தொகுதிகள் குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது ஒன்றிய அரசு மாநிலங்கள் செலுத்தும் வரியின் மூலம் கிடைக்கும் வருவாயில் தமிழ்நாட்டிற்கு 100 ரூபாய்க்கு 29 ரூபாயும், கர்நாடகாவிற்கு 14 ரூபாயும் வழங்குகின்றது. ஆனால் 4 வட மாநிலங்களில் 100 ரூபாய்க்கு 425 ரூபாயும், தற்போது ஒன்றிய அரசு ஆட்சி செய்ய ஆதரவு குடுத்துள்ள பீகார் மாநிலத்திற்கு 100 ரூபாய்க்கு 922 ரூபாய் வழங்குகின்றது. இது தென் மாநிலங்களை வஞ்சிக்கும் செயலாகும். தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய பேரிடர் மீட்பு நிதி, 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதி உள்ளிட்ட எந்த ஒரு நிதியும் ஒன்றிய அரசு முறையாக வழங்கவில்லை. தற்போது தொகுதி மறுசீரமைப்பு என்பது வரும் 25 ஆண்டுகளுக்கு தேவையில்லை என்பது எங்களுடைய கருத்தாகும். தற்போது நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு எம்பிக்கள் மக்கள் பிரச்சினைகளுக்காக கேட்கும் கேள்விகளால் ஒன்றிய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் செய்வது அறியாது திகைத்து வருகிறது. தென் மாநிலங்களில் செல்லும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கல்வி அறிவோடு செல்வது அவர்களுக்கு பிடிக்கவில்லை. தொகுதி மறு சீரமைப்பு என்ற பெயரில் வடமாநிலங்களுக்கு தொகுதிகளை அதிகமாக பிரித்து கொடுத்து, வட மாநிலங்களில் ஜெயித்தால் ஆட்சி அமைக்கலாம் என்று நினைப்பில் ஒன்றிய பாஜக அரசு செயல்படுகிறது. இது ஒரு பொழுதும் நடக்காது. 100 நாள் வேலை திட்டத்திற்கு வேலைக்கு செல்பவர்களுக்கு செல்பவர்களின் குழந்தைகள் பள்ளிக்குச் சென்று பசியால் வாடக்கூடாது என்ற எண்ணத்தில் காலை உணவு திட்டத்தை தமிழக முதல்வர் கொண்டு வந்துள்ளார். இந்த திட்டம் இந்தியா மட்டுமல்ல உலக நாடுகளில் பல்வேறு இடங்களில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டமாகும். தற்போது ஒன்றிய அரசு தொகுதி மறு சீரமைப்பை கொண்டு வரும் நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்ட சட்ட ஒழுங்கை காப்பாற்ற முடியாமல் ஒன்றிய அரசு திணறியது போல் தென் மாநிலங்களுக்கும் இதே நிலை ஏற்படும். மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு பின் தான் தொகுதி மறுசீரமைப்பு செய்வார்கள் என கூற முடியாது. தற்போது எந்த ஒரு பிரச்சனையும் இல்லாத நிலையில் வக்பு வாரிய சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது ஒன்றிய அரசின் சர்வாதிகார போக்கை காட்டுகிறது. இந்தியாவில் வக்பு வாரியத்தால் எந்த ஒரு போராட்டமும், சட்ட ஒழுங்கு பாதிப்பும், நீதிமன்ற வழக்குகளும் எதுவும் இல்லாத நிலையில் அவசர அவசரமாக இரவு 8 மணிக்கு இந்த சட்டத்தை கொண்டு வர வேண்டிய நிலை இன்றைய பாஜக அரசுக்கு வந்துள்ளது அவர்களின் மதம் சார்ந்த சிந்தனையை காட்டுகிறது. வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு இந்தியாவில் ஒன்றிய பாஜக அரசுக்கு ஆதரவு அளித்து வரும் மாநிலங்கள் தவிர மற்ற அனைத்து மாநிலங்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் வக்பு வாரிய சட்டத்திற்கு எதிராக 232 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். பாஜக தமிழ்நாட்டில் எப்பொழுதும் வளர முடியாது என்பது நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் ஜெயித்து திமுக கூட்டணி கட்சியினர் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றிருப்பது இதற்கு ஒரு சான்றாகும். எனவே பொதுமக்கள் தொகுதி மறுசீரமைப்பை சீரமைப்பின் பாதிப்புகளை உணர வேண்டும். தொகுதி மறு சீரமைப்பால் தென் மாநிலங்களில் பொருளாதார வளர்ச்சியில் பெரும் வீழ்ச்சியை சந்திக்க நேரிடும். ஒன்றிய அரசின் இந்த முயற்சியை தமிழ்நாடு முதல்வர் திமுக தலைவர் மு க ஸ்டாலின் இந்தியாவில் தென் மாநிலங்களில் உள்ளவர்களை ஒருங்கிணைத்து இதற்கான எதிர்ப்பை வலியுறுத்தியுள்ளார். தொகுதி மறுசீரமைப்பு ஒருபொழுதும் ஏற்றுக் கொள்ளப்படாது என கூறினார்.
தொகுதி கள் மறு சீரமைப்பு எம்எல்ஏ ராஜா

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics