சுசீந்திரம், ஆக. 5 –
தேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 14-வது வார்டு கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை நூல் நிலையம் எதிரே உள்ள தானுமாலையன் நகரில் கான்கிரீட் சாலை மிகவும் மோசமானதாய் இருந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் அவர்களிடம் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையின் அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ 16.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகளை இன்று தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜெசிம் தலைமை வகித்தார். தேரூர் பேரூர் கழகச் செயலாளர் வீரபத்திரன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத் தலைவர் மாதவன்பிள்ளை, செயல் அலுவலர் அழகப்பன், இளநிலை பொறியாளர் லட்சுமி காந்தன், ஒப்பந்ததாரர் ஜார்ஜ் ஸ்டீபன், ஒன்றிய மகளிர் அணி தலைவர் அமுதா ராணி, உள்நாட்டு மீனவர் சங்கத் தலைவர் ஆறுமுகம், கவுன்சிலர்கள் கணேசன், தலைமை கழக பேச்சாளர் நாஞ்சில் ஞானதாஸ், மாதவன் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.