தேனி, அக்டோபர் 02 –
தேனி மாவட்ட செய்தி – மக்கள் தொடர்பு அலுவலக உதவியாளராகப் பணியாற்றி வந்த சகோதரர் மணி 55 அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார். அனைவரிடமும் அன்பாக, இன்முகத்துடனும் அவரது பணிக்காலத்தில் சிறப்பாக பணியாற்றி வந்த மணி அவர்களின் திடீர் மறைவு. அவரது நண்பர்கள், உற்றார் உறவினர்கள் மற்றும் குடும்பத்தாருக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு தினத்தமிழ் நாளிதழ் குழுமத்தின் சார்பாக எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரின் ஆன்மா எல்லாம் வல்ல இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறோம்.



