தேனி, அக்டோபர் 02 –
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் பொருளாதாரத்தினை மேம்படுத்திடும் வகையில் பல்வேறு தொழில் தொடங்க நிதியுதவி வழங்கும் தொழில்முனைவுத் திட்டம் (CM-ARISE), நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினப் பெண்கள் விவசாய நிலம் வாங்க 50% அல்லது அதிகபட்சம் ரூ.5.00 இலட்சம் வரை மானியம் வழங்கும் நன்னிலம் மகளிர் நில உடமைத் திட்டம் மற்றும் வருமானம் ஈட்டும் திட்டங்கள் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் (பிரதான் மந்திரி அனுசுசித் ஜாதி அபியுதாய் யோஜ்னா) திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேற்குறிப்பிட்ட திட்டங்களின் கீழ் பயன்பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசு இ-சேவை மையம் மூலம் (Online வாயிலாக) விண்ணப்பிக்கலாம்.
மேலும், கூடுதல் விவரங்கள் அறிய மாவட்ட மேலாளர், தாட்கோ, அறை எண்.73, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தேனி என்ற முகவரிக்கு நேரில் அல்லது 94450 29480 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.



