விழுப்புரம், செப். 01 –
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான், இராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடைபெற்ற தேசிய அளவிலான தடகள போட்டியில் செஞ்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் மூன்றாம் வகுப்பு மாணவி செல்வி ஆபியா சுல்தானா அவர்கள் தங்க பதக்கம் பெற்றதையொட்டி நேரில் வாழ்த்தி தன் விருப்ப நிதியிலிருந்து ரூ.20,000 க்கான காசோலையினை வழங்கினார். உடன் திண்டிவனம் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) இளமதி, செஞ்சி வட்டார கல்வி அலுவலர் திரு. மதன் குமார், தலைமையாசிரியர் திருமதி ஆயிஷா பேகம் மற்றும் பலர் உள்ளனர்.



