புதுக்கடை, நவ. 15 –
தேங்காப்பட்டணம் அருகே வடலிகூட்டம் என்ற பகுதியில் இன்று அனுமதி இன்றி பாறைகள் உடைக்கப்படுவதாக தேங்காப்பட்டணம் கிராம அலுவலர் பிரதீப் என்பவருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அவர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு நிலத்தின் உரிமையாளர் அனுமதி உடன் 2 ஹிட்டாச்சி வாகனங்களை வைத்து அரசு அனுமதியின்றி பாறைகளை திருட்டுத்தனமாக உடைத்து, டெம்போவில் ஏற்றுவதை கண்டுபிடிக்கப்பட்டது.
அதிகாரியை கண்டதும் அனைவரும் தப்பி ஓடிவிட்டார்கள். அதில் ஹிட்டாச்சி வாகனத்தின் உதவியாளர் சுபின் என்பவர் மட்டும் பிடிபட்டார். அவரை பிடித்து புதுக்கடை போலீசில் ஒப்படைக்கப்பட்டார். புதுக்கடை போலீசார் நிலதின் உரிமையாளர், 2 ஹிட்டாச்சி வண்டிகளின் டிரைவர்கள் உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து, சுபினை கைது செய்தனர்.


